விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் ...
ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். வரி முறையை சாமானிய மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக்கும் வகையில் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ...
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பைக்காரா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்தப் பகுதியை சார்ந்த பாபு என்பவர் நிலத்தில் தொலைபேசி டவர் அமைக்க வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாத வாடகை ரூ.35,000 ரூபாய்க்கு மேல் பெறுகிறர்.அவருடைய சொந்த இலாபத்திற்காக தொலைபேசி டவர் அமைத்ததினால் அப்பகுதியில் இயற்கை வனவிலங்குகள் பறவைகளின் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் .அவரது மகள் ஆதித்யா (வயது 19) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு பஸ்சில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ...
கோவையை அடுத்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சூலூர் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை இவரது மோட்டார் சைக்கிளில் சூலூர் விமானப்படைத்தளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட ...
கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64) இவரது வீட்டின் முன்பகுதியில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சாப்பிட சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது கடை மேஜை டிராயரில் இருந்த 33 ஆயிரத்து 500ரூபாயை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...
தமிழ்நாடு அரசு ,இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா,சின்ன வேடம்பட்டி தர்மலிங்கம்,செம்மேடு சுதா,மத்வராயபுரம் கவிதா, சொக்கம்புதூர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வடக்கு மாவட்ட ...
கோவை ராம்நகர் ,நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த குணசேகர் (வயது 51) உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் கடத்துவதையும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக போதை பொருட்கள் எந்த பகுதியில் இருந்து மாநகருக்குள் வருகிறது? அவற்றை கடத்தி வருபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அந்த நபர்கள் ...
கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண் .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து ...