சென்னை: தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துணிச்சலை போற்றும் வகையில் முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளது. ஒற்றுமை பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் பேட்டி ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த ...
புதுடெல்லி: ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போர் உச்சத்தை எட்டி உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சைபர் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வௌியாகி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஏடிஎம்கள் ...
கோவை மே 10 கோவை கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இது பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ...
கோவை மே 10 கோவை ராஜவீதியை சேர்ந்தவர் தீஜாராம் சவுத்ரி (வயது 52) இவர் ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தீஜாராம் ரேஸ்கோர்சில் உள்ள நடைபாதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நேற்று இறந்தார். ...
கோவை மே 10 கோவை பக்கம் உள்ள கே .கே . புதூர், நாகம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மகன் ஹரிகரன் (வயது 26) இவரது நண்பர் சந்தோஷ்க்கும்அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் ( வயது 26)என்பவருக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக உன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது. ...
கோவை மே 10 கோவைபோத்தனூர், சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயது 23 ) இவர் அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது நண்பர் காளீஸ்வரனுடன் நஞ்சுண்டபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது ...
கோவை மே 10 கோவைபக்கம் உள்ள வேடப்பட்டி , வன்னியம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் .இவரது மகள் ரேஷ்மா ( வயது 26 )இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) என்பதற்கும் பொது நடைபாதையில் கழிவுநீரை ஊற்றுவதில் தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். ...
கோவை மே 10 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் எண் (56110) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் 8 -25 மணிக்கு கிணத்துக்கடவுவுக்கும்,8:55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9-25 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து அடைகிறது. இந்த ரயிலை கல்லூரி மாணவ – ...
கோவை மே 10 கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர்திருமுருகன் (வயது 47 )நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி ( வயது 40) இவர்களுடைய மகள் ஜனனி (வயது 17) பிளஸ் 2மாணவி. திருமுருகன் நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளில் கொடுத்து நகையாக மாற்றி மீண்டும் நகை கடைகளில் கொடுத்து ...