கோவை மே 12 கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாகமாநகர போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இதில் துடியலூர், குருடம் பாளையம் பக்கம் உள்ள ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் இந்திய ...

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ...

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று (மே 11) அர்ப்பணித்தார். இதன் தொடக்க விழாவில் காணொலி வழியாக அமைச்சர் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ...

கோவை மே 12 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு தினமும் மர்ம ஆசாமிகள்மது அருந்துவது, விபச்சாரம் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் காலையில் பலர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் ...

 நாளுக்கு நாள் மாறிவரும் கால நிலை மாற்றம் காரணமாக உலகத்தின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் குவேட்டா நகரில் நேற்றைய தினம் (மே 10) அதிகாலை 1.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இதே போல ஆப்கானிஸ்தானில் நேற்று ...

நெய்​வேலி அனல் மின் நிலை​யத்​தில் நேற்று டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்​பிலான பொருட்​கள் சேதமடைந்​தன. கடலூர் மாவட்​டம் நெய்​வேலி​யில் உள்ள என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் 2-ம் அனல் மின் நிலைய விரி​வாக்​கத்​தில் நேற்று அதி​காலை டிரான்​ஸ்​பார்​மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்​கள் 4 வாக​னங்​களில் சென்று தீயை ...

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ, பரப்பவோ வேண்டாம். ...

இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் ...

மதுரை: கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்கிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ...