பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்தியா பாதுகாப்பாக இருக்குமென உலகப் புகழ்பெற்ற ‘மூடிஸ்’ நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் பொருளாதார நிலைமை படுமோசமாகிவிடும் என மூடிஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள மூடிஸ் நிறுவனம் என்பது ஒரு முக்கியமான கடன் தரநிலை மதிப்பீட்டு நிறுவனம். இது ...

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ...

நாடு முழுவதும் நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய ...

எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கொடூர சம்பவத்துக்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை ...

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ...

தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் 40 புதிய சிறு விளையாட்டு மைதானங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு விளையாட்டு ஆனையம் சார்பில் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் ...

சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் ...

2 பேருக்கு சம்மன். கோவை மே 6 கோவை புலியகுளம் அம்மன் குளம்,புது அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்வேல் (வயது 33) இவருக்கு ஒரு மகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இவர்களது பக்கத்து வீட்டு வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி சவுமியா ( வயது 50)இவர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் 5 நாய்கள் ...

கோவை மே 6 கோவை உக்கடம், துர்ககாலால் வீதியை சேர்ந்த முகமது யூசுப் ( வயது 48) தெற்கு தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் அரசு காரில் உக்கடம் எஸ். எஸ். கோவில் வீதியில்சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது யூசுப் ...

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் ...