கோவை: ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை காயிதே மில்லத் நகரில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையின் போது மதம் தொடர்பான கருத்துக்களை குதுபா என்பவர் பேசினார். இதை அதே பகுதியை சேர்ந்த கோவை காதர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் .இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சமூக வலைதளத்தில் ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு.(வயது41) நேற்று இவர் அங்குள்ள ரங்கநாதபுரம்- கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்து டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செந்தில் பிரபு அதே இடத்தில் இறந்தார். இதே போல சூலூர் பக்கம் உள்ள ...

கனிம வள கொள்ளையை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு- பாஜக மாநில விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் மனு .. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அவர்கள் ...

கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை ...

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 68 போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி 2 பேரும் ...

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கொண்டம்பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி இவரது மனைவி காமாட்சி ( வயது 45 )இவரது மகளுக்கும்,திண்டுக்கல் மாவட்டம் பழனி, கரட்டு பிரிவை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 30)என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் , ...

கோவை தெற்கு உக்கடம், ஜி .எம். நகரை சேர்ந்தவர் அப்பாஸ், இவரது மகன் முகமது நவாஸ் (வயது 23 )டி.எம்.இ. படித்தவர் இவர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கடைவீதி சப் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது அவர் தனது இடது கையை பிளேடால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது ...

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி தனிப்படை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலை நடந்த கோடநாடு பங்களா, கனகராஜ் உயிரிழந்த இடம், சயான் குடும்பத்தினர் ...

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் முருகேசன் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ...