பாஜகவின் நட்சத்திர பிரசாரகர்கள்… பிரதமர் மோடி, நட்டா, அமித் ஷா, அண்ணாமலை..!

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, அண்ணாமலை உட்பட 40 பா.ஜ., நட்சத்திர பிரசாரகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் ‘நட்சத்திர பிரசாரகர்களை’ கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, எடியூரப்பா, நளின்குமார் கட்டீல், பசவராஜ் பொம்மை, பிரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா, கோவிந்த் கார்ஜோள்.அசோக், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான், மன்சுக் மண்டவியா, அண்ணாமலை, அருண்சிங், அருணா, சி.டி.ரவி, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், ஹேமந்த் பிஸ்வா சர்மா,தேவேந்திர பட்னவிஸ், பிரபாகர் கோரே, ஷோபா, நாராயணசாமி, பகவந்த் குபா, அரவிந்த் லிம்பாவளி, ஸ்ரீராமுலு, கோட்டா சீனிவாச பூஜாரி, பசனகவுடா பாட்டீல் எத்னால், உமேஷ் ஜாதவ், சலவாடி நாராயணசாமி, ரவிகுமார், ராஜேஷ், ஜக்கேஷ், ஸ்ருதி, தாரா அனுராதா . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.