நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்… நடந்து சென்ற பள்ளி மாணவி கன்னத்தில் கேக் தடவிய 4 இளைஞர்கள் கைது..!

ரோட்டில் நடந்து சென்ற மாணவி கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4வாலிபர்கள் கைது. கோவை மே 25 கோவை குனியமுத்தூர் .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் கீர்த்தனா ( வயது 15 )பள்ளிக்கூட மாணவி,இவர் நேற்று அங்குள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் சிறுமி கீர்த்தனாவின் முகத்தில் கேக்கை தடவினார்கள்.இதைகீர்த்தனா தடுத்தார்..இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து கீர்த்தனாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கீர்த்தனா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு சென்று நடுரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ( வயது 21) சஞ்சீவி (வயது 19 )ஆகாஷ் ( வயது 16 ) சந்தோஷ் (வயது 20 )ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ,மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.