திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து பாய்ந்த கார் இரண்டு பேர் பலி.

திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து பாய்ந்த கார் இரண்டு பேர் பலி.

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் ஒன்று ஆகும் இது.
இந்த பாலம் வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, கேரளாவில் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் அதிகம் பயணிப்பது வழக்கம்.
இந்த பாலம் இரவு நேரத்திலும் தீவிர பிசியாக இருக்கும் பாலம் ஆகும். அதிக அளவில் இந்த பாலத்தில் வாகனங்கள் செல்வது வழக்கம்.
இந்த பிஸியான திருச்சி பாலத்தில்தான் இன்று விபத்து ஏற்பட்டு உள்ளது. திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிகாலையில் ஏற்பட்ட கார் விபத்தால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
கார் கவிழ்ந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த தம்பதி பலியானதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் – சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. சென்னை நோக்கி இந்த கார் சென்றுள்ளது.
அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது, பனிமூட்டம் காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உடைத்துக் கொண்டு கார் விழுந்துள்ளது. பாலத்தில் இருந்து 80-90 கிமீ வேகத்தில் கார் வேகமாக கீழே விழுந்து கார் விபத்தில் சிக்கியது. கீழே விழுந்ததும் கார் தீ பிடித்துள்ளது.
விபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. விபத்தில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கார் அப்படியே ஜம்ப் ஆகி படங்களில் காட்டுவது போல விழுந்துள்ளது. சீட்டின் முன் பக்கம் இரண்டு பேருமே அமர்ந்து உள்ளனர். அங்கேயே உடல் நசுங்கி இவர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றாலும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். திருச்சி வந்தவர்கள்.. அங்கே விமான நிலையத்தில் உறவினர்களை ஏற்றி அனுப்பி உள்ளனர். அந்த தம்பதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
காரை மீட்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. காரில் வேறு யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. தடுப்பு சுவர் மொத்தமாக உடைந்து உள்ளதால் ஒரு பக்கம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால்; திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டது.
இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே போக்குவரத்தை சரி செய்ய போலீசார் குவிந்து உள்ளனர்.
யார் அவர்கள்: அந்த தம்பதிகள் யார்.. கேரளாவில் அவர்கள் எங்கே உள்ளனர் .. உறவினர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களின் பெயர்களும் தெரியவில்லை. காரில் இருந்த ஐ டி கார்டுகள் தீயில் எரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் ஒன்று ஆகும்