கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்தால், மீண்டும் சேர்த்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.கட்சியின் கட்டமைப்பில், மிக முக்கியமான அஸ்திவாரமாக உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனங்களை விரைந்து முடிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமன பட்டியலை அக்., முதல் வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.கட்சியிலில் இருந்து வெளியேறியவர்களால் மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப வேண்டும். தகுதி படைத்த நிர்வாகிகள் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க., ஆட்சியின் வேதனைகளை விளக்கியும் தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி வரவேற்றார்.
கூட்டம் துவங்கும் முன், பழனிசாமியை மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தனித்தனி குழுக்களாக சந்தித்து பேசினர்.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில், 117 மாவட்ட செயலர்கள் வரும் வகையில் கட்சி அமைப்பை மாற்ற வேண்டும்.எந்ததெந்த மாவட்டங்களை பிரிப்பது என்பது குறித்து, தற்போதைய மாவட்ட செயலர்களே முடிவு செய்ய வேண்டும். யாரை மாவட்ட செயலராக நியமிக்கலாம் என்பது குறித்த பெயரையும், அவர்களே பரிந்துரைக்க வேண்டும் என, பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.’பொதுச்செயலருக்கு முழு அதிகாரம் உள்ளது. தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்’ என, பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.***சனாதன விவகாரம்திசை திருப்பும் செயல் ”ஷாக் அடிக்கும் வகையில், மின்கட்டணம் உயர்வு, கள்ளக்கடத்தல், போதை பொருள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, சீரழிந்த முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் படும் வேதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும்படி பழனிசாமி கூறினார்.