இந்தியாவில் டிக் டாக் மீதான தடை தொடரும் – மத்திய அரசு.!!

டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக் டாக்’ செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்துள்ளன.

அதேப்போல கடந்த ஜனவரியில் அமெரிக்காவும் இந்த செயலுக்கு தடை விதித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே, உலக அளவில் ‘டிக் டாக்’ செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக இருந்து வந்தது. இது சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ‘டிக் டாக்’ செயலியை இளைய தலைமுறையினர் உள்பட பல ஆயிரம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சீன வீடியோ செயலியான இந்த ‘டிக் டாக்;பாதுகாப்பு தனிநபரின் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு கருதி, இந்திய அரசு கடந்த 05 ஆண்டுக்கு முன்பு தடை விதித்தது.

இதற்கிடையே, டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது என செய்திகள் நேற்று மாலை முதல் தீயாகப் பரவ தொடங்கியுள்ளன. இது குறித்து, ‘டிக் டாக்’ அல்லது அதன் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ இதுவரை எந்த அறிவிப்பும் விடவில்லை. இந்நிலையில், ‘டிக் டாக்’ தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்று அறிவித்துள்ளது.. மேலும், இதுபோன்ற செய்திகள் தவறானது, மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் என இந்தியா அரசு தெரிவித்துள்ளது.