திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் 5-ம் நாள் இரவு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் ...
புதுடெல்லி: வரும் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கான தடை நீட்டிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்றும், எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, ...
சென்னை: நிலவின் தென்துருவத்தில் கடும் குளிரில் செயல்பாட்டை நிறுத்திய சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். நேற்று விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் இன்று மிக முக்கிய நாளாகும். இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு ...
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது. இந்த கப்பல் கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் வரை 3 ஆய்வாளர்களை ஏற்றுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ், ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் ...
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை அவர்களின் தலைமை மற்றும் மேற்பார்வையிலும், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட சர்வோமா மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் ...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கை ஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் நாரை பறக்க முடியாத 48 மடை கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து பால்குளம் ...
மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், லட்சுமி நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 51) ஆடு மேய்க்கும் தொழிலாளி .இவர் அந்த பகுதியில் உள்ள காடுகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார் .இதற்காக அங்குள்ள லட்சுமி நகர் வழியாக ஆடுகளை ஓட்டி செல்வார். அப்போது அந்த ஆடுகள் நல்லாம்பாளையம் லட்சுமி நகர் 3-வது ...
கோவை மத்திய சிறையில் உள்ள வால்மேடு பிளாக்கில் நேற்று கைதிகள் -வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.. இதில் கைதிகள் மரத்தில் ஏறி கைகளை பிளேடால் அறுத்து கொண்டனர்,.இதில் 7 கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. கைதிகள் வார்டர்களை தாக்கியதில் வார்டர்கள் ராகுல், பாபு ஜான்,மோகன்ராம் விமல் ராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...













