குன்றத்தூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதிக்காக ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் குமாரி அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமாரியின் வீட்டில் அன்றைய தினமே ரொக்க பணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் ...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளா் மருத்துவா் அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி மாற்றம்… அவர்கள் விவரம் வருமாறு கார்த்திக் செவ்வாப்பேட்டை சட்டம் ஒழுங்கு கோகிலா கொரட்டூர் சட்டம் ஒழுங்கு சத்தியமூர்த்தி திருநின்றவூர் குற்றப்பிரிவு தேசிகா மணி நசரத் பேட்டை சட்டம் ஒழுங்கு சிவகுமார் வெள்ளவேடு குற்றப்பிரிவு சந்தோஷ் குமார் எண்ணூர் ...
ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்ற போட்டியை வைத்தால் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை… சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் வாசுதேவன் வயது 61.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்திக்க வந்திருந்தார். எனது 2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றி ...
வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார். நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலை வாய்ப்புத் திட்டத்தை (ABRY) இந்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ...
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ...
ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ...
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் ...
சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள், அடுத்தமாதம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை ...













