கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் பிரனேஸ் (வயது 13) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் .குடியரசு தின விழா விடுமுறையையொட்டி நேற்று அங்குள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவரது தந்தை பிரவீன் குமார் ...

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு கடந்த 14 ஆம் தேதி கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது . வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது .இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நீ ...

சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் கட்காரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ...

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது ...

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு ...

சேலம்: மன்னராட்சியைக் கொண்டுவர திமுக முயற்சிக்கிறது. ஜனநாயகநாட்டில் ஒரே குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவது ஏற்புடையதல்ல, அது சர்வாதிகாரம் ஆகிவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தை அடுத்த மல்லமூப்பம்பட்டியில் நேற்று நடைபெற்றது. திமுக, பாமக, கொமதேக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 700-க்கும் மேற்பட்டோர், கட்சியின் ...

சென்னை: மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறியிருந்த தமிழக காங்கிரஸ், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்திய ...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதை எதிர்த்து ஏகனாபுரம் மக்கள் 5-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தால், 2-வது சர்வதேச புதிய ...

கோவை ஆர் .எஸ் .புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவ ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது 22) ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. மருதமலை கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது . இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு 8 – 30 மணி அளவில் மருதமலையில் நடைபெற்ற தைப்பூச விழாவை டிரோன் கேமரா மூலம் தனியார் நிறுவனத்தினர் ...