கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி பொதுச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ் ,செயலாளர் சூலூர் குணசிங்,ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா,மற்றும் சம்மேளன நிர்வாகிகள் சித்திரை பாண்டி,  எம். கே. விஜி ஆகியோர் இன்று தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர் . ...

கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஈரோடு லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன்‌ முன்னிலை ...

கோவை அருகே உள்ள கெம்பனூரில் இருந்து தடாகம் ரோடு வழியாக காந்திபுரத்துக்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள முத்தண்ணன்குளம்,தண்டு மாரியம்மன் கோவில் சந்திப்பில் திரும்பும் போது ரோடு ஒர தடுப்புச் சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் மீது அந்த பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து அதே ...

கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கணபதி நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் அரிசி மூட்டைகளை ஒருவர் அடுக்கி வைத்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது . இதையடுத்து ...

கோவை :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கம் உள்ள பெரு மாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51) இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் சிங்கநல்லூர் இ .எஸ் . ஐ. மருத்துவமனை அருகே கல்லுக்குழி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று இவரது மகன் பூவரசன் அந்த பகுதியில் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 53) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...

கோவையில் கடந்த 2 மாதங்களில் ரூ19 கோடியே 75 லட்சம் இழந்து விட்டதாக 113 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசார் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பதிவாகும் மோசடி வழக்குகளில் ரூ.19 ...

கோவை : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சூலூர் வருகிறார்.அவரது சுற்றுப்பயணம் முழு விவரங்கள் வருமாறு:-நாளை 27 – ந் தேதி ( செவ்வாய்) மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை விமான நிலையம் வருகிறார். மதியம் ...

கோவை சேரன் மாநகரை  சேர்ந்தவர் அய்யனார் ( வயது 20) கல்லூரி மாணவர். இவர் ஆர். எஸ். புரம். டி. பி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அய்யனாரிடம் ஒரு ரூபாய் கேட்டனர். அவர் ரூபாய் கொடுத்தவுடன் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் நைசாக அவரது பாக்கெட்டில் ...

தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் அ. அமல்ராஜ் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அறவே இருக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வெளிமாநிலத்தில் ...