அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகைச்சுவை நடிகர் செந்தில், பா.ஜ.க வேட்பாளர் ட.முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக கூறினார். பிரதமர் வீடு கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் 12 லட்சத்திற்கு அதிகமான பயனளிகளுக்கு ...
சென்னையில் உள்ள ஆமைகள் சரணாலயத்தில் புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை தொழிலாளர்கள் மெதுவாக கடலில் விட்டனர் . புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லியின் ஆமைகளின் நம்பமுடியாத பயணத்தை பற்றி சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து சாஹு அவர்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலத்திற்கு முந்தியது இந்த ...
சென்னை அருகே குடிபோதையில் பிரபல ரவுடியுடனான தகராறு முற்றிய நிலையில், கொலை செய்து, உடலை தலைக்கீழாக புதைத்து விட்டு சென்றுள்ளனர் தொழிலாளர்கள். ரவுடியின் உடல் ஒரு வார காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் ...
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவை இன்று முதல் ...
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணநிதியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜகவுக்கு எதிரான திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி முதல்வர் ...
கோவை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார். ...
கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் மற்றும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இது சம்பந்தமாக ரயில்வே காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்தது. இதன் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு, சென்னை ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, காஞ்சி மாநகரை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 56) இவரது மனைவி சுமதி ( வயது 52) இவர்கள் சவுரிபாளையத்தில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தனர் . அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனோகரனும் , அவரது மனைவியும் காரில் கனியூர் டோல்கேட் அருகில் வைத்து ஜோடியாக விஷம் ...