இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் ஒதுக்கீடு மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதற்கான ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, திரைமறைவில் சதித்திட்டம் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் நடத்தியதாக கைதானவர்கள் கூறியுள்ளார்களாம். இதனால் இருவரையும் ...
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மேலும் தீவிரமடைந்து வலுவான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகக் கடல் பகுதிகளில் வழக்கத்தை விடக் கடுமையான சீற்றமும், மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளிக் ...
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு ...
இந்தியாவில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக் குறைவு, உள்கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோநேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அதன்படி பிரதமர் மோடி இன்று இந்தோநேசியாவுக்கு புறப்படுகிறார். இன்று முதல் 8-ஆம் தேதி வரை இந்தோநேசியா செல்லும் பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,304 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.51 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் ...
புற்றுநோய் (Cancer) என்ற சொல்லே மனிதர்களைப் பெருமச்சிலும், பயத்திலும் ஆழ்த்தக்கூடியது. அதிலும் குறிப்பாக, புகையிலைப் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்தியாவில் ‘வாய் புற்றுநோய்’ (Oral Cancer) என்பது மிக வேகமாகப் பரவி வரும் ஒரு உயிர்க்கொல்லி அரக்கனாக உருவெடுத்துள்ளது. இதுவரை இதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கீமோதெரபி (Chemotherapy) மற்றும் கதிர்வீச்சு (Radiation) போன்ற சிகிச்சைகள், புற்றுநோய் ...
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இங்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து ...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் ...













