தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ...

சென்னைக்கு 5 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள 5 நாள் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த 5 நாள் ...

மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ...

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 15 நாட்களில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் ...

உச்சநீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை அமர்வு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. அந்த வகையில் இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஓய் சந்திரசுட்,பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் குற்றவாளி என கண்டறியப்பட்டு 2 வார சிறை தண்டனையும், 1 ஆண்டு பயிற்சி செய்ய தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற ...

தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் ...

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே,அமெரிக்க அதிபர் ஜோ ...

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு ...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் இளம்பெண்ணுக்கு இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ஒரு டொயோட்டா ...

மதுக்கரை: நெல்லையில் உள்ள ஒரு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுபோல் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்காத வகையில் கனிம வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கோவை மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் கனிம வளத்துறை அதிகாரிகள் மதுக்கரை ...