கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக ...
கண் இமைக்கும் நேரத்தில் விபத்து: பைக் மீது கார் மோதி கோவை பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பரிதாப பலி..
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 22). விக்னேஷ் (22). நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த ...
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் ...
கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஏட்டுகளுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி கோவை மாநகரில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 50 பேர் சிறப்பு பெற்றதாக பதவி உயர்வ பெற்றுள்ளனர்.இவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை ...
கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தேன். இந்நிலையில், எனது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. அதில் சென்று ...
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை’ சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு ...
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், ...
கோவை : ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கத்தை விட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் ஆயிரம் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் ...
உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியா தலைமைத்துவத்தை ...
2668 அடி உயரம் கொண்ட மலை மீது இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கு பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 06.12.2022 இன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை காலை 06.00 ...













