சென்னை: இன்று மதியத்திற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் ...

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருகிறது. கடந்த நவம்பர் மாதம் இரண்டு காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் உருவான நிலையில் அவை அனைத்தும் வலுவடைந்து பெரிய சேதம் ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால், மீண்டும் கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ...

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு 99வது ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், கோவா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியும், ரியர் அட்மிரலுமான விக்ரம் மேனன் கலந்துகொண்டு 22 வாரங்கள் கடும் பயிற்சி ...

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா். நாா்வேயின் முன்னாள் பிரதமரான அவா், இது குறித்து அந்த நாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு ...

மாண்டஸ் புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ‘ மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து கொண்டிருக்கிறது. இன்று காலை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின் தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு ...

புயல்கரையை கடந்ததை நிலையில், சென்னையில் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்கள் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. வழக்கமாக இரவு 11 மணி வரையிலும் அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ...

சென்னை: மாண்டஸ் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகள் சின்னாபின்னமாகியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், ...

கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார் கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள ...

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ...

கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக் காதல் மற்றும் திருமண உறவை மீறிய உடலுறவு குற்றமாக ...