2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தால் குஜராத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிசில் நடக்க இருக்கும் நிலையில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவிலும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற ...

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் ...

நம் வீட்டின் சமையலறையில் உள்ள பல பொருட்கள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் தாங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் கை வைத்தியம் பார்த்தார்கள். அதில் அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் ...

ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி8 பேர் பரிதாபமாக ...

1000 ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடம் இருந்து அரசிடம் கோரிக்கைகள் எழுந்தது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (டிச. 28) ஆலோசனை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஏற்கெனவே ...

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மூர்த்தி என்பவர் வீட்டில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உணவருந்தினர். ...

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ...

கொரோனா வைரசின் ஓமிக்ரான் பிஎப் 7 வேரியன்ட் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு டிசம்பர் 24 முதல் வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தோராயமாக சோதனை செய்யத் தொடங்கியது. அந்த சோதனைகளில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. “கடந்த மூன்று நாட்களில் அதாவது ...

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாடாளுமன்றத் ...

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக நாகராஜ், எழுத்தராக விஜயகுமார். பதிவேற்றராக சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய தொகை 20 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் செலுத்திய தொகைக்கு ...