கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே.கே.புதூர், ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர். அருள் பிரகாஷ், இவரது மனைவி சுபத்ரா (வயது 32) நேற்று இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வரும் போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதே சமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் ...

புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை டிரைவர் ,மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர், ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை ...

கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டையாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற செல்லத்துரை (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ மர்ம நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். தீ எரிவதை கண்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென் செங்கம்பாளையத்தை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது என்ஜினியரிங் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை ...

கோவை: சென்னையில் இருந்து ரயில் மூலம் 1,458 டன் யூரியா கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் ராபி பருவத்தில் மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்திற்கு தேவையான அனைத்து ...

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் சமீபத்தில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனடியாக அந்த கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைத்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது ...

கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர் மருதூர் ஊராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி உதவி ...

கோவை சூலூர் பக்கம் உள்ள ஜெய் கிருஷ்ணாபுரம், வலசு பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்  வயது 83  நேற்று இவர் காரில் தாராபுரம் சென்று கொண்டிருந்தார். காரை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சடையபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 36) என்பவர் ஓட்டினார். பல்லடம் – தாராபுரம் ரோட்டில் செஞ்சேரி புதூர் அருகே சென்றபோது கார் திடிரென்று நிலை ...

கோவை மாவட்டம் பீளமேடு பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று. இங்கு கார்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்றிரவு இரவு சுமார் 11 மணி அளவில் ஹோப் கல்லூரி அருகே நின்று கொண்டு இருந்த காரின் முன் பக்கம் தீ பிடித்தது. காரின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவி மளமளவென எரியத் ...