கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பும் அதிமுக.. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் அதிமுகவினர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராகவும் மற்றும் அதிமுக சட்டவிதிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பேசி வருகின்றனர். இன்றுடன் ...

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 60-க்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் நடந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ...

தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுகவிலிருந்து நீக்கம்.. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ...

சென்னை : ரம்ஜான் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் வெளியூர் செல்வதால் சென்னை விமான உள்நாட்டு நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமான விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,675 ...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ...

ராம்நகர்-கனகபுரா தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தம்பி சுரேஷும் நேற்று மனு தாக்கல் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ராம்நகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் வருவாய் துறை அமைச்சர் அசோக் களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் பிரமாண்டமான ...

ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சினில் ...

சவுத் பத்ரே தீவு: ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ...

கிருஷ்ணகிரி அருகே தனது பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை , இலவசமாக வழங்கி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்த் மூதாதையர்கள், பெற்றோர்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போதும், ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை ...