பொள்ளாச்சியில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அருள்மிகு. பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று இரவு யாரோ கோவில் முன் கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் .அந்த நேரத்தில் காவலாளி வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவலாளி ரத்தினம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.