கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று எல் அண்டு டி பைபாஸ், சங்கோதிபாளையம் ரோட்டில் வாகன சோதன நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் மினி டெம்போவில் 11 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அரிசி மூட்டைகளும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனம் ஓட்டி வந்த கோவை ஆத்துப்பாலம் பைசல், (வயது 38) பொள்ளாச்சி கனகராஜ் (வயது44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவுக்கு இந்த அரிசியை கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடகாவுக்கு 11 டன் ரேசன் அரிசி கடத்த முயற்சி-2 பேர் கைது..!









