கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர்ஆனந்த் ( வயது 35 ) இவர் கோவை – வால்பாறை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வால்பாறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 24 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் பொள்ளாச்சி வந்து அடைந்தபோது 2 பேர் உக்கடம் செல்வதற்கு டிக்கெட் எடுத்தனர். பஸ் உக்கடம் சென்றடைந்ததும், பஸ் உக்கடம் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூறினார்.இறங்க மறுத்து அவர்கள் 2 பேரும் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மருதாச்சலம் நகரை சேர்ந்த கோகுல் ( வயது 28 ) சூலூர், மருத தேவர் வீதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 26) என்பது தெரிய வந்தது . இவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.