நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை… கோவை வியாபாரி வீட்டில் புகுந்து 4 பேரை கட்டி போட்டு ரூ.10 லட்சம் பணம், தங்க வைர நகைகள் திருட்டு..!!

கோவை பீளமேடு புர்ஹானி காலனியை சேர்ந்தவர் சபீர் டைப் வாக் (வயது 65) இவர் அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.நேற்று இரவில் இவரது வீட்டில் தாயார் சைத்தூன் ( வயது 85) மனைவி அஸ்மா ( வயது 59) பேத்திகள் உசைனா (வயது 14) பாரூள் ( வயது11)ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவை உடைத்து 4 முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்தனர். அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர். பின்னர் வீட்டிலிருந்த ரூ 10 லட்சம் பணம் மற்றும்-தங்க வைர நகைகளை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் 4 பேரும் இந்தியில் பேசி உள்ளனர். அந்த வீட்டில் 2 மணி நேரம் இருந்து பொறுமையாக கொள்ளையை நடத்தி உள்ளனர். இன்று காலையில் இந்த கொள்ளை குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் துப்பறியும் நாயும் கொண்டு செல்லப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தப்பி விடக்கூடாது என்பதற்காக விமான நிலையம் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..