சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.30 லட்சம் கட்டு கட்டாக பணம் பறிமுதல்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓடும் ரயில்களிலோ அனைத்து ரயில் நிலையங்களிலோ சட்ட விரோதமாக பணங்களோ விலை மதிப்பில்லாத பரிசு பொருட்களோ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என என தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

அதன் பேரில் தமிழக ரயில்வே போலீஸ் டி ஐ ஜி ராமர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் துறைமுகம் பறக்கும் படை அதிகாரி உதவி செயற்பொறியாளர் ஜிகே பாபு மகளிர் சிறப்பு உதவி ஆய்வாளர் உமா தலைமை காவலர் சபி காவலர் தியாகராஜன் சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை காவலர் ஜெய்சங்கர் ஆயுதப்படை காவலர் பிரசாந்த் 9 வது நடைமேடையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹைதராபாத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகளிடம் சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூச்சியிரக்க வந்த பயணி ஒருவரை சோதனை போட்டனர். அந்த சோதனையில் ரூபாய் 30 லட்சம் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவரது பெயர் விபரம் வருமாறு ஞானவேல் தங்கவேல் வயது 42 தகப்பனார் பெயர் கந்தன் வா விலா நகர் வேன தேவி சட்ட னா பள்ளி குண்டூர் ஆந்திர பிரதேஷ் இந்த பணத்திற்கான எந்தவித ஆவணங்களும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..