கோவை, சூலூர் பக்கம் உள்ள கலங்கல், கே. .ஜி. நகரை சேர்ந்தவர் செல்லதுரை ( வயது 29) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி நேற்று கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த செல்லதுரை பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்தும் மனைவி ராஜேஸ்வரி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply