கோவை மாவட்டம், காரமடை பக்கம் உள்ள தோலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் .இவரது மனைவி கிரிஜா ( வயது48 ) அங்குள்ள விவசாய தோட்டம் ஒன்றில் விவசாய வேலை செய்ய சென்றார் . அப்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரிஜா அந்தமின் வேலியில் சிக்கினார். இதில் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக மின்வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply