கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று முன்தினம் கோவை வந்தார்.அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நேற்று அவர் ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அதற்காக அமைக்கப்பட்ட உள்ள மென்பொருள் செயலியில் புகார் கொடுக்க வருபவர்கள் கூறும் தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? புகார் தாரர்கள் கொடுக்கும் மனுவுக்கு தீர்வு காணப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார் . பின்னர் கோவை மாநகர பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க காரணமாக இருந்த போலீசார் மற்றும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .இதில் கூடுதல் டிஜிபி சங்கர் கலந்து கொண்டு 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், சிலம்பரசன் சுபாசினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply