மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு புதிய இணையதளம்..!

மிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்.6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://nsc.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது. இதில் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம்பேர் மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்த முனைவதால், சர்வர் முடக்கி விடுகிறது.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு புதிய லிங்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மின்வாரியம். அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள லிங்கில் மின் நுகர்வோர் தங்களது ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய தேவை இல்லை. அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பதிவு செய்தால்போதும்.