பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் – முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேரணியாக சென்று அஞ்சலி.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி வகுத்து சென்றனர். இந்த பேரணி, அண்ணா சாலையில் இருந்து தொடங்கி அண்ணா சதுக்கத்தில் முடிவடைந்தது.

மேலும் இந்த பேரணியில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி ஆகியோர் மரியாதையை செலுத்தினர்.