அண்ணாமலை வாட்ச் பிரச்சனை தேவையற்றது-அண்ணாமலைக்கு ஆதரவாக பேசிய வானதி சீனிவாசன்..!

ண்ணாமலை வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் ஒவர் கோட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டீ-ஷர்ட் என விலை குறித்த சர்ச்சைகள எழுந்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது முதலில் இருப்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் தான். கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் அது குறித்த விமர்சங்களும் விளக்கங்களுமே ஆட்கொண்டுள்ளது.

அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சின் ரூ 3.45 லட்சம் ரூபாய் எனவும், அது ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தினுடையது என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்வி எழுப்பட்டபோது அதற்கு பதிலளித்த அண்ணாமலை, இது ரபெல் நிறுவனத்தின் வாட்ச் எனவும், நான் தேசியவாதி அதனால் இந்தியாவின் தயாரித்த வாட்சை கட்டியுள்ளேன். இந்த வாட்சி உலகில் 500 பேரிடம் மட்டுமே உள்ளது. நான் அதில் 149 ஆவது ஆள். நான் உயிருடன் இருக்கும் வரை இந்த வாட்ச் என் கையில் இருக்கும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு மின்சாரத் துறைசெந்தில் பாலாஜி, அந்த வாட்ச்சின் ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிட்டால் ஏழை எளிய மக்களும் வாங்கி பயனடைவோமே என ட்விட்டரில் சூட்சுமமாக தாக்கி இருந்தார்.

தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற சமத்துவ கிற்ஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை, .தமிழ்நாடு முழுவதும் விரைவில் பாஜக சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனது நடைப்பயணத்தை தொடங்கும் போது நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010 -2011 ஆம் ஆண்டு முதல் வங்கிக் கணக்கு நிதி விவரங்களை மக்களுக்கு சமர்ப்பிப்பேன். கடந்த 13 ஆண்டுகளாக நான் செய்த செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளில் பதிவு செய்யவுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வாட்ச் குறித்து சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாஜகவி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அண்ணாமலைக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார்.

அது குறித்து பேசிய வானதி சீனிவாசன், அண்ணாமலையின் வாட்ச் , சட்டை, பேண்ட் ,ஷூ குறித்த கேள்விகள் தேவையற்ற கேள்வி. மக்கள் பிரச்சினை ஆயிரம் உள்ளது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அரசு அடிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.