பழனியில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பிஏஆர்எப் நடத்தும் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையமான அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி, மையத்தை துவக்கி வைத்து முதியோர்களுக்கு மதிய உணவினை பரிமாறினார். இந்நிகழ்வில் முரளி, சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பழனியில் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பராமரிப்பு இல்லாத முதியோர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் அன்புச் சோலை திட்டம் தொடங்கப்பட்டதற்கு முதியோர்களும் ,சமூக ஆர்வலர்களும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ. செந்தில்குமார் ஆகியோருக்கு நன்றியிணை தெரிவித்துக் கொண்டனர்.








