ஈரோடு மாவட்டம், பவானி லட்சுமி நகர், பைபாஸ் சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தின் கீழே அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவானி காவல் நிலையத்திற்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பவானி போலீசார் விசாரிக்கையில் இறந்து போனவர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடகணசாலை, ராசி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் சுபாஷ் 24, என தெரியவந்தது.மேலும் இவர் இளம்பிள்ளையில் உள்ள சேலை கடை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் நேற்று காலை 10 மணிக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை டிப்பளமோ (EEE) படித்துள்ளார். மேலும் இறந்து போன சுபாஷின் பெற்றோர் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட செய்தியை பார்த்து பவானி காவல் நிலையம் வந்தனர் அவர்களிடம் பவானி காவல் நிலைய ஆய்வாளர் விசாரித்து வழக்குப் பதிவு செய்து பிரேதம் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காவிரி புதிய பாலத்தின் கீழே அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-காவல் நிலையத்திற்கு வாட்ஸ் ஆப்-ல் வந்த தகவலால் பரபரப்பு ..!

 
		
 
				        





