கோவை துடியலூர் அருகே உள்ள கே. என்.ஜி.புதூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 67 )நேற்று இவர் தீபாவளி தினத்தில் காலையில் எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து அங்குள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது மகன்பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.