திடீரென பிரேக் போட்டதால் லாரியில் பைக் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி…

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் சென்னை சில்க்ஸ் நகரைச் சேர்ந்தவர் வெற்றி விஜயன் (வயது 37) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் பாலக்காடு- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கே. ஜி. சாவடி அருகே சென்றபோது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி எந்த சிக்னலும் இல்லாமல் திடீர் பிரேக் போட்டு நின்றது. இதனால் வெற்றி விஜயன் ஓட்டிச் சென்ற பைக் அந்த லாரி மீது மோதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.இது குறித்து கே .ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் சம்பவ இடத்துக்கு வந்து சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக பொள்ளாச்சி வடசித்தூரை சேர்ந்த லாரி டிரைவர் சம்பத்குமார் ( வயது 48 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.