கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரி டிரைவர் கதிரவன் ( வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply