கோவை துடியலூரைச் சேர்ந்தவர் முகமது (வயது 35) டிப்ளமோ படித்தவர் .சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவர். ஒருமனிதனின் முகத்தை பார்த்ததும் அப்படியே வெள்ளை பேப்பரில் 10 நிமிடங்களில் வரையும்ஆற்றல் படைத்தவர்.இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-நான் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறேன்.பூங்காக்கள்,கண்காட்சி,திருவிழாக்கள் போன்ற இடங்களில் விருப்பப்படுபவர்களின் ஓவியத்தை வரைந்து கொடுப்பேன்..ஒருவரின் முகத்தைப் பார்த்ததும் 10 நிமிடங்களில் வரைந்து விடுவேன்.இதற்காக ஒரு படத்துக்கு 100ரூபாய் பெற்றுக் கொள்வேன்.ஒரு நாளைக்கு 10 பேரின் படத்தை வரைவேன்.எனது திறமையை பல முக்கிய பிரமுகர்கள் பாராட்டி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தன் பெற்றோருடன் நடை பயிற்சி சென்ற மோனிகா என்ற சிறுமியின் படத்தை 10 நிமிடத்தில்வரைந்து நடைபயிற்சி செய்பவர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
Leave a Reply