மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு- எடப்பாடி பழனிசாமி பேச்சு.!!

சென்னை: காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பு காணப்பட்டது. காவிரியில் எந்தவொரு திட்டத்திற்கும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தருவதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.