அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..!!

பிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், ஓபிஎஸ், இருவரும் இணைந்து செயல்படுவோம் என ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார். ஓபிஎஸ்-ன் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்த ஈபிஎஸ், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் இந்த வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.