நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த பின் விஷால், நாசர்,கார்த்தி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்படாமல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அனைத்து பதவிகளுக்கும் பாண்டவர் அணி தான் முன்னிலையில் இருந்தது. இறுதியில் அந்த அணியை சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி என அனைவரும் வெற்றி பெற்றனர்.

நீதி, நேர்மைக்கு கிடைத்த வெற்றி இது என தெரிவித்த பாண்டவர் அணியினர், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது தான் முதல் பணி என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று  விஷால், நாசர் உட்பட பாண்டவர் அணியினர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கின்றனர். சினிமா துறையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவர்கள் முதலமைச்சருடன் பேசியதாக தெரிகிறது. அப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் இருக்கிறார்.