செல்ல பிராணிகளை விட்டு வர மனமில்லாத இந்திய மாணவர்களின் பாசம்… அழைத்து வர அனுமதியளித்த மத்திய அரசு.!!

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மத்திய மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலாவிடம் பிராணிகள் நல அமைப்பான பீட்டா முறையிட்டது. இதையடுத்து உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு வரும் வகையில் விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதற்கு பீட்டா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.