ஆவண சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துவதும், லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதாக போலீஸார் பணம் வசூல் செய்வதும் வழக்கமான ஒன்று.
இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது கண்ணால் காண கூடிய வகையிலான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரையில், வாகனங்களை நிறுத்த கூடாது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம்
ஆனால் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளை துன்புறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிரடியான உத்தரவை கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் பிறப்பித்தார்.
உத்தரவை தற்போது கோவா டிஜிபி ஜஸ்பால் சிங்கும் பிறப்பித்துள்ளார். கோவா மாநிலத்தில் உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் ஆவண சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன.
இதையடுத்து கோவா டிஜிபி ஜஸ்பால் சிங் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கோவா மக்களுக்கும், கோவாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.