4 நாளில் 102% எட்டியது அதானி எண்டர்பிரைசஸ்.. ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு உயர்வு ..!

தானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் அதல பாதளம் எட்டிய நிலையில், தற்போது அதிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ம்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 4 வர்த்தக அமர்வுகளில் மட்டும் மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம்

அதானி குழும பங்குகள் மோசமான சரிவினை எட்டிய நிலையில், இப்படி ஓரு வாய்ப்பினை கொடுத்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 102% அதிகரித்து, 2049.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1017.10 ரூபாயாகும். இது கடந்த பிப்ரவரி 3 அன்று எட்டியது. கடந்த அமர்வில் மட்டும் இப்பங்கின் விலையானது 14% அதிகரித்து, 1802.50 ரூபாயாக முடிவுற்றிருந்தது.

எனினும் தற்போது வரையிலும் கூட இப்பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 51% கீழாகவே காணப்படுகின்றது. இதன் 52 வார உச்ச விலை 4189.55 ரூபாயாகும். இது கடந்த டிசம்பர் 2022ல் எட்டியது. இப்பங்கின் விலையானது ஒரு மாதத்தில் மட்டும் 46% சரிவினைக் கண்டுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான குற்றசாட்டுகளுக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1.16 லட்சம் கோடி ரூபாயாக சரிந்திருந்த நிலையில், தற்போது சற்றே அதிகரித்து சந்தை மதிப்பு 2.35 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக அதானி குழும, சரிவினைக் கண்ட நிலையில், தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளது.

ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவினைக் கண்டன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் உள்பட மற்ற பங்குகளும் பெரும் வீழ்ச்சியினை கண்டன. பங்கு சந்தையில் தங்களது நிறுவனங்களின் மதிப்பினை உயர்த்தி காட்ட, அதானி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டர்ன்பர்க் குற்றம் சாட்டியது. குறிப்பாக வரவு செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

ஆனால் அதானி குழுமமோ ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டானது தவறு. இதற்கு ஆதாரமில்லை. இது அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கும் விதமாக வந்துள்ளது. எங்களின் சரிவில் ஹிண்டர்ன்பர்க் பலடைய பார்க்கிறது என்ற குற்றச்சாட்டியினையும் முன்வைத்தது.

எனினும் அதன் பிறகு முதலீட்டாளர்கள் இழந்த நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அதானி குழுமத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்து, 20,000 கோடி ரூபாய் முதலீட்டினை முதலீட்டாளார்களுக்கே திரும்ப கொடுத்தது. மேலும் கால அவகாசம் இருந்தும் கடனை முன் கூட்டியே செலுத்துதல், முழுக்கடனையும் செலுத்த திட்டமிடுதல் என முயற்சி செய்து வருகின்றது. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. ஆக இதன் காரணமாக அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.