கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் கவுதம் (வயது 22). விக்னேஷ் (22).
நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் கவுதம், விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்சு ஊழியர்கள் உயிருக்கு போராடிய கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான விக்னேஷ் நாமக்கல் எஸ்.பி. புதூரை சேர்ந்தவர்.