இல்லத்தரசிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு.!!

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மட்டுமே உயர்ந்தது என்பதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 அதிகரித்து 967 என விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.