கார் மோதி சாலையில் நடந்து சென்ற காவலாளி பலி..

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி, மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரான் (வயது 68)காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று வடக்கி பாளையம் பிரிவு அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போ அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் ஆரான் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகன் முருகன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகிறார்.