கோவை அரசு பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுத படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் காளிமுத்து (வயது 29) இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. இவர் நேற்று கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 3- 40 மணிக்கு திடீரென்று அங்கு ‘” டமார் “என்று சத்தம் கேட்டது “அப்போது காளிமுத்து வயிற்றை பொத்தியபடி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அதில் காளிமுத்து தன்னிடமிருந்து எஸ்.எல்.ஆர் .ரக துப்பாக்கியால் தன் வயிற்றில் சுட்டதும் , குண்டுவலது புறத்தில் பாய்ந்து கொண்டு பின்புறம் முதுவழியாக வெளியே வந்ததும் தெரிய வந்தது .இதையடுத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் காளிமுத்து சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் .வயிற்றில் குண்டுதுளைத்து பின்பக்கம் வழியாக வெளியே வந்ததால் வலதுபுறம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை அளித்தும்பலன் அளிக்காமல் நள்ளிரவு 12- 40 மணிக்கு காளிமுத்து இறந்தார். தற்கொலை செய்த போலீஸ்காரர் காளிமுத்துவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் இருப்பதாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இவர் 2013 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். பின்னர் அவர் 2016ம் ஆண்டு கோவை மாநகர ஆயுத படைக்கு மாற்றப்பட்டார். இரண்டாம் நிலை காவலராக உள்ள அவருக்கு தில்லைநாயகி என்ற மனைவியும் ஒரு மகன்’  உள்ளனர். காளிமுத்துவுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் கடன் உள்ளதாக கூறப்படுகிறது.இவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் அந்த கடன் வந்ததா? அல்லது கடனுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருடன் வேலை செய்யும் போலீஸ்காரர்களுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.போலீஸ்காரர் துப்பாக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.