கோவையில் போதைபொருள் ரவுடி கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர்,வழக்கறிஞர்- மாட்டியது எப்படி..? திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.!

கோவையில் போதை பொருள் கடத்தும். ரவுடி கும்பலுக்கு உதவியதாக போலீஸ்காரரும், வக்கீலும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிக்கியது எப்படி என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:- கஞ்சா விற்ற வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோரை 4 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து துருவி ‘துருவி, விசாரித்தனர் .அவர்கள் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர் . அதில் போலீஸ்காரர் ஸ்ரீதர் பேசும் 30க்கு மேற்பட்ட ஆடியோக்கள் இருந்தன. இது பற்றி போலீசார் விசாரித்த போது வாட்ஸ் அப் காலில் பேசினால் ஆடியோவை பதிவு செய்ய முடியாது. எனவே போலீஸ்காரர் ஸ்ரீதர் போதை கும்பலிடம் வாட்ஸ்அப்காலிலே பேசி வந்துள்ளார். ஆனால் அந்த கும்பல் போலீஸ்காரர் ஸ்ரீதர் பேசுவதை லவ்டு ஸ்பீக்கரில் போட்டு மற்றொரு செல்போனில் பதிவு செய்து சேகரித்துள்ளனர். அதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் போலீஸ்காரர் ஸ்ரீதர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோவை அரசு மருத்துவமனையில் பெற்றோரை காணாமல் தவித்த ஒரு குழந்தையை மீட்டு ஒப்படைத்து பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல போதை கும்பலுடன் வக்கீல் ஆசிக் நடனமாடும் வீடியோ காட்சிகளும் செல்போனில் பதிவாகி இருந்தது. இதனால் அவரும் சிக்கினார்.கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் ஸ்ரீதரன் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சுந்தராபுரம், அஷ்டலட்சுமி நகரில் வசித்து வருகிறார்.வழக்கறிஞர் ஆசிப் (வயது 30) போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையில் வழக்கறிஞர் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..